சளி மற்றும் இருமலுக்கு காரணமும் அறிகுறிகளும் ?How To find Cold And Fever ?

அனைவர்க்கும் வணக்கம் இன்றைய பதிவில் சளி மற்றும் இருமலுக்கான கரணங்கள் மற்றும் அறிகுறிகளை தெளிவாக பார்க்கலாம் 
பொதுவாக உடலில் உள்ள சுவாச குழாய் மற்றும் நுரையீரல் போன்றவற்றில் படியும் எதிர் வினைகளை சுத்தம் செய்வதற்கு உடல் பயன்படுத்தும் ஒரு இயங்குமுறை தான் இருமல் ஆகும் இந்த இருமல் மூன்று வாரங்களுக்கு குறைவாக இருந்தால் இதனை குறுகிய கால இருமல் என்பர் . அதுவே, எட்டு வாரங்களுக்கு அதிகமாக இருந்தால் இதனை நாட்பட்ட நாட்பட்ட இருமல் என்பர். இருமல் பல வகைப்படும். சளி இருமல், வறட்டு இருமல், கக்குவான் இருமல் போன்றவை சில வகைகளாகும். ஒவ்வொரு வகை இருமலின் தன்மை மற்றும் காரணத்தைப் பொறுத்து அதன் சிகிச்சை மாறுபடுகிறது. கபத்தை உற்பத்தி செய்யும் இருமல் வகை சளி இருமல் என்று அறியப்படுகிறது.
பொதுவாக உங்கள் உடலில் வழக்கத்திற்கு மாறாக அதிகமான அளவில் சளி இருப்பதை இந்த வகை இருமல் உணர்த்துகிறது. சளி அல்லது காய்ச்சல் உண்டாகக் காரணமாக இருக்கும் நுண்ணுயிர்களான பக்டீரியா மற்றும் வைரஸ் போன்றவற்றால் ஏற்படும் தொற்று பாதிப்புகள் பெரும்பாலும், பெரியவர்களுக்கு ஏற்படும் இந்த வகை குறுகிய கால இருமலுக்கு காரணமாக உள்ளன. மூச்சுக்குழாய் அழற்சி என்னும் ப்ரான்கைடிஸ், நிமோனியா, நாட்பட்ட நுரையீரல் நோய் நீர்மத் திசு வளர்ச்சி என்னும் சிஸ்டிக் பைப்ரோசிஸ், ஆஸ்துமா போன்ற சில ஆரோக்கிய குறைபாடுகளும் உடலில் அசாதாரணமான அளவு சளி உற்பத்தி ஆவதற்கு வேறு சில காரணங்களாகும். பெரும்பாலும், கைகுழந்தைகளுக்கும் வளரும் பிள்ளைகளுக்கும் இருமல் உண்டாக , வைரஸ் தொற்று பாதிப்பு அல்லது ஆஸ்துமா போன்றவை காரணமாக இருக்கலாம்.
 குழந்தைகளுக்கு சளி இருமல் உண்டாவதற்கு, அந்நிய பொருட்கள் நுகர்வது, சிகரெட் புகை அலல்து இதர சுற்றுச்சூழல் சீர்குலைவுகளும் காரணமாக இருக்கலாம். பொதுவாக வறட்டு இருமலாகத் தொடங்கும் இந்த நிலை, மார்பு பகுதியில் ஒரு கடினத்தன்மையைத் தந்து, தொடர்ச்சியாக இந்த பாதிப்பு அதிகரித்து, சளியுடன் கூடிய இருமலாக மாற்றம் பெறுகிறது, உங்கள் மார்புப் பகுதியில் ஏதோ ஒன்று ஒட்டிக் கொண்டு இருப்பது போன்ற உணர்வு அல்லது உங்கள் தொண்டையில் ஏதோ ஒன்று சிக்கிக் கொள்வது போன்ற உணர்வு உங்களுக்கு வெளிப்படும்.
அறிகுறிகள் இருமலின் போது அல்லது சுவாசிக்கும்போது விசில் போன்ற சத்தம் (வீசிங்), மூச்சுத் திணறல், மார்பு வலி அல்லது இறுக்கம், காய்ச்சல் போன்றவை இருமலுடன் தொடர்புடைய பிற அடையாளம் மற்றும் அறிகுறிகளாகும். தொண்டை வறட்சி அல்லது சளியைத் தொடர்ந்து இருமல் வெளிப்படலாம் . பொதுவாகக் காலைப் பொழுதுகளில் இருமல் அதிகமாக இருக்கலாம். இதனால் உங்கள் வேலை மற்றும் தூக்கம் தடைபடலாம். உங்களை மட்டும் இல்லாமல் உங்கள் அருகில் இருப்பவர்களும் இருமல் மூலம் பாதிப்படையலாம். இருமலைத் தடுப்பது எப்படி? இருமல் வருவதை முற்றிலும் தடுக்க முடியாவிட்டாலும், காய்ச்சல் அல்லது அடுத்த நிலை இருமல் உண்டாவதை ஓரளவுத் தடுக்க, சில வழிகளைப் பின்பற்றலாம். அதற்கான சில உதாரணங்கள் இதோ, உடல் நிலை சரியில்லாமல் இருப்பவர்களுடன் தொடர்பில் இருப்பதை தவிர்த்துக் கொள்ளலாம்.
நீங்கள் உடல் நலமில்லாமல் இருந்தால், வேலைக்கு அல்லது பள்ளிக்கு செல்வதைத் தவிர்ப்பதால், தொற்று பரவுவதைத் தடுக்கலாம். உங்கள் மூக்கு மற்றும் வாய் பகுதிகளை மூடிக் கொண்டு தும்மலாம் அல்லது இருமலாம். திரவ உணவுகளை அதிகம் உட்கொண்டு நீர்ச்சத்தோடு இருக்கலாம். உங்கள் வீடு மற்றும் அலுவலகத்தில் பொது பயன்பாட்டு இடங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளலாம். எப்போதும் சுத்தமாகக் கை கழுவுங்கள், குறிப்பாக, இருமியவுடன், சாப்பிட்டு முடித்தவுடன், கழிவறையை பயன்படுத்தியவுடன் மற்றும் உடல் நலம் குன்றியவரைக் கண்டு வந்தவுடன் உங்கள் கைகளைச் சுத்தமாகக் கழுவுங்கள்.
 பொதுவாக, இருமல் சில நாட்களில் தானாகவே மறைந்துவிடும். இருப்பினும், சில நேரங்களில் மருத்துவ உதவி அவசியமாகிறது. கீழே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரைக் காணுவது அவசியம். சில நாட்கள் தொடர்ந்து இருமல் இருக்கும் காலத்தில், இருமல் சரியாவதை விடுத்து இன்னும் மோசமான நிலையை எட்டுவதை இந்த அறிகுறிகள் மூலம் உணர்ந்து கொள்ள முடியும். சரியாக சாப்பிட முடியாமல் இருப்பது, சரியாக மூச்சு விட முடியாமல் இருப்பது. இருமலின் போது இரத்தம் வெளிப்படுவது. இருமலுடன் சேர்த்து இவற்றில் ஏதாவது ஒரு அறிகுறி தோன்றுவது - குளிர், 101 டிகிரிக்கு அதிக காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு, சளியில் துர்நாற்றம், அடர்த்தியான, பச்சை மற்றும் மஞ்சள் நிற கபம் வெளிப்படுவது, சோர்வு மற்றும் பலவீனம். . மூன்று வாரங்களுக்கு அதிகமாக இருமல் தொடர்வது . கழுத்துக்கு அருகில் உள்ள சுரப்பிகள் வீங்கி இருப்பது மார்பு வலியை அனுபவிப்பது . எந்த ஒரு சரியான காரணமும் இல்லாமல் உடல் எடை குறைவது
இன்றைய பதிவில் போதுமான அளவு இருமல் மற்றும் சளியை பற்றி பார்த்து விட்டோம் அடுத்த பதிவில் இவைகளை போக்க அல்லது வராமல் தடுக்க என்ன வலி என்பதை பற்றி பார்க்கலாம் நன்றி இந்தப்பதிவை உங்கள் நண்பர்கள் உறவினர்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள் மேலும் இது போன்ற பல சுவாரசிய தகவலை தெரிந்து கொள்ள நமது பக்கத்தை பின்தொடருங்கள் நன்றி ...

Post a Comment

0 Comments