அட ! 3 ஆண்டுகளில் 50 லட்சத்துக்கு மேற்பட்ட ஆண்கள் வேலை இழப்பா ?


அனைவர்க்கும் வணக்கம் இன்றைய காலகட்டத்தில் படித்தவர்கள் அதிகமாக வேலையின்றி திண்டாடுவதைப் போலவே குறைவாக படித்தவர்களுக்கும் வேலைவாய்ப்பு என்பது குறைந்து கொண்டே வருகிறது வேலை வாய்ப்பைப் பொறுத்தவரை பெண்களின் நிலை ஆண்களை விட அமோகமாக  இருக்கிறது எனவும் கூறியிருக்கிறது.
Image result for job
அஜிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் 2016 முதல் 2018 வரை 50 லட்சத்துக்கு மேற்பட்ட ஆண்கள் வேலை இழந்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகமான அஜிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் வேலைக்குச் செல்வோர் பற்றிய ஆய்வை நடத்தியுள்ளது. இதில், நவம்பர் 2016ல் பணமதிப்பு நீக்க உத்தரவை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டதையொட்டி இந்தியாவில் வேலை இழப்பு அதிகரித்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.
Image result for job
மக்கள் தொகை அதிகரிப்பும் வேலை இழப்புக்குக் காரணமாக அமைந்துள்ளது எனக் கூறியுள்ள இந்த ஆய்வறிக்கை இந்த எண்ணிக்கை வேலை இழந்த ஆண்களைப் பற்றியது மட்டுமே. பெண்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் வேலை இழப்பு இன்னும் அதிகமாக இருக்கும்." எனவும் தெரிவிக்கிறது.

2011ஆம் ஆண்டு முதலே இந்தியாவில் வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே வருகிறது எனவும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. வேலையில்லாதவர்களில் இளைஞர்களும் உயர் படிப்புகளை முடித்தவர்களுமே அதிகமாக உள்ளதாகவும் குறிப்பிடுகிறது.


இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் கருத்துக்கணிப்பை கருத்தில் கொண்டு 2016 முதல் 2018 வரையான வேலை பெற்றோர் மற்றும் இழந்தோர் நிலையையை ஆராய்ந்துள்ளது.

Image result for job
இந்த பிரச்னைக்கு தீர்வாக கிராமப்புறங்களில் உள்ளதைப் போல, நகர்புற வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும் இதன் மூலம் இந்தியாவில் 5 கோடி வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த முடியும் எனவும் பரிந்துரைத்துள்ளது.
Image result for job
இது தவிர மேலும் மூன்று பரிந்துரைகளையும் அளித்துள்ளது. ஒன்று, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்விக்கான செலவினம் 6% ஆகவும் சுகாதாரத்துக்கான செலவினம் 3% ஆகவும் இருந்தால் 20 லட்சம் நல்ல வேலை வாய்ப்புகளை உருவாக்குவதுடன் அரசு சேவைகளையும் சிறப்பாக வழங்கலாம். இரண்டு, பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு அரசு சேவைகளில் சமரசம் செய்துகொள்ளக் கூடாது. மூன்று, புதிய பொருளாதாரக் கொள்கை மூலம் இந்தியாவில் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும்.

மேலும் இது போன்ற பல சுவாரசிய தகவலை காண இணைந்திருங்கள் நன்றி ...

Post a Comment

0 Comments