அனைவர்க்கும் வணக்கம் இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு இந்த நாட்களில் அடுத்தவர் வீட்டுற்கு சென்று சாப்பிடக்கூடாது என்பதைப்பற்றித்தான் சரி போலும் இது போன்ற பல சுவாரசிய தகவலை தெரிந்து கொள்ள நமது பக்கத்தில் இணைத்து கொள்ளுங்கள் நன்றி
உணவை மற்றவருடன் பகிர்ந்து சாப்பிடுவது என்பது மிகவும் உயர்ந்த சிந்தனையாகும் அதேபோல பசியில் இருப்பவர்களுக்கு உணவளிப்பது என்பது நீங்கள் உங்கள் வாழ்க்கையில் செய்யக்கூடிய மிகச்சிறந்த மிகப்பெரிய புண்ணியமாகும் பகிர்ந்து சாப்பிடுவது என்பது மனித இயல்புகளில் முக்கியமான ஒன்றாகும். ஆனால் அனைத்து நாட்களுக்கும் இது பொருந்தாது.
கந்த புராணத்தின் படி குறிப்பிட்ட நாட்களில் பிறருடன் உணவை பகிர்ந்து கொள்வது மற்றும் பிறரின் வீடுகளில் சாப்பிடுவது உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய பாவங்களை சேர்க்கும். இந்த தினங்களில் பிறரின் உணவை சாப்பிடுவது உங்களுக்கு ஆயுள் முழுவதும் பாவத்தை ஏற்படுத்துவதுடன் உங்களை அடுத்த பிறவியில் மிருகமாக பிறக்கவும் வைக்கும். எந்தெந்த நாட்களில் பிறருடன் உணவை சாப்பிடக்கூடாது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
கிரகண நாள் ஸ்கந்த புராணத்தின் படி எக்காரணம் கொண்டும் கிரகண நாட்களில் பிறரின் வீடுகளில் சாப்பிடக்கூடாது. அந்த நாளில் நீங்கள் முடிந்தவரை வீட்டை விட்டு வெளியேறாமல் உங்கள் வீட்டிலேயே சமைத்து சாப்பிட முயலுங்கள். கடவுளை வணங்குங்கள். கிரகண தினத்தன்று மற்றவர்கள் இல்லத்தில் சாப்பிடுவது கடந்த 12 ஆண்டுகளில் நீங்கள் செய்த அனைத்து புண்ணியங்களையும் அழிக்கும்.
அமாவாசை இரவு அமாவாசை இரவன்று மற்றவர்கள் இல்லத்தில் சாப்பிடுவது உங்களுக்கு கடவுளின் சாபத்தை பெற்றுத்தரும், அதேசமயம் நீங்கள் யார் வீட்டில் சாப்பிடுகிறீர்களோ அவர்களுக்கு அதிக புண்ணியம் வந்துசேரும்.
பொங்கல் தினம் பொங்கல் தினத்தன்று மற்றவர்களின் இல்லத்தில் சாப்பிடுவது சாஸ்திரங்களின் படி நல்லதல்ல. அவ்வாறு செய்வது உங்களின் கடந்த ஒரு மாத நல்வாழ்வை சிதைக்கும்.
சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு மற்றவர்களின் இல்லத்தில் சாப்பிடுவது என்பது மிகவும் தவறான ஒன்றாகும். இவ்வாறு செய்வது சூரிய பகவானின் கோபத்தையும், சாபத்தையும் உங்களுக்கு பெற்றுத்தரும்.
மிருக வாழ்வு மற்றவர்களின் இல்லத்திற்கு சாப்பிடுவதற்காகவே செல்பவர்கள் அவர்களின் அடுத்த பிறவியில் மிருகமாக பிறப்பார்கள் என்று புராணங்கள் கூறுகிறது. உணவுக்காக ஒருவர் எப்போதும் பேராசைப்படக்கூடாது. பிரசாதங்களை வேண்டுமென்றால் நீங்கள் எப்போது வேண்டமென்றாலும் சாப்பிடலாம் என்று பிரசாதங்கள் கூறுகிறது.
பிரசாதம் பிரசாதம் என்னும் சமஸ்கிருத வார்த்தையின் உண்மையான அர்த்தம் கருணை என்பதாகும். எனவே பிரசாதம் என்று வரும்போது நாம் கடவுளின் கருணையை பிரசாதத்தின் வடிவில் பெற முயலுகிறோம் என்று பொருள்படும்.
கடவுளுக்கு திரும்ப கொடுப்பது பெரும்பாலும் பிரசாதம் என்பது கடவுளுக்கு நாம் படைக்கும் உணவு என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அனைத்தும் கடவுளுக்கே சொந்தம் என்பதை நாம் மறந்து விடுகிறோம். பிரசாதத்தின் வழியாக கடவுள் அவரின் ஆசீர்வாதத்தை நமக்கே மீண்டும் கொடுக்கிறார்.
உணவு மட்டுமல்ல பிரசாதம் என்றால் நம் மனதில் முதலில் நினைவிற்கு வருவது உணவு மட்டும்தான். ஆனால் உண்மையில் கடவுளுக்கு படைக்கப்படும் அனைத்துமே பிரசாதம்தான். உடை, மலர் மற்றும் நகை என எது வேண்டுமென்றாலும் பிரசாதமாக இருக்கலாம்.
பிரசாதத்தின் சக்தி பிரசாதத்திற்கு என்று ஒரு தனி சக்தி இருப்பதாக கூறப்படுகிறது. மனதில் பக்தியுடனும், அன்புடனும் சமைக்கப்பட்டு கடவுளுக்கு அர்ப்பணிக்கும் உணவானது கடவுளை உங்களை நேருக்கு நேராக சந்திக்க வைக்க உதவும். உங்களின் வேண்டுதல்களை நேராக கடவுளின் பாதங்களுக்கு எடுத்து செல்லும் சக்தி பிரசாதத்திற்கு இருக்கிறது.
இந்த பதிவை இறுதிவரைக்கும் படித்ததற்கு மிக்க நன்றி மேலும் இது போன்ற பல வகையான சுவாரசிய தகவலை தரிந்து கொள்ள நமது பக்கத்தை ...
0 Comments