அனைவர்க்கும் வணக்கம் இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு குஜராத் மாநிலத்தில் உள்ள சிவன் கோயில் ஒன்று தினமும் ஆறு மணி நேரம் மட்டுமே கண்களுக்குத் தெரிகிறதாம் குஜராத் மாநிலம் கோலியாக், என்னும் இடத்தில் அமைந்துள்ளது இந்த இத்திருக்கோவில் ..
இந்த நிஸ்களங்கேஸ்வரர் கோயில் எனும் சிவன் கோயில் கடலுக்குள் கட்டப்பட்டிருக்கிறது பல சமயங்களில் கடலில் முங்கியே காணப்படும். கடற்கரையிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கு கீழே உள்ளது இத்திதிருக்கோவில் .
இரவு 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த கோயில் கடலுக்குள் மறைந்திருக்கும் பஅதன் பின்னர், கடல் உள்வாங்கி கோயிலுக்குச் செல்ல பாதை உருவாகும் ஆனால் கோயிலுக்குச் செல்பவர்கள் அனைவரும் மதியம் 2 மணி முதல் இரவு 8 மணிக்குள் கோயிலுக்கு சென்று திரும்பிவிடுவார்கள் இந்நேரத்திற்குப் பிறகு கோயிலை கடல்நீர் சூழ்ந்துகொள்கிறது.
இந்தக் கோயிலை மகாபாரதத்தில் வரும் பாண்டவர்கள் கட்டியதாக நம்பப்படுகிறது மகாபாரதப் போரில், தங்கள் சகோதரர்களான கௌரவர்களைக் கொன்ற பாவத்தைப் போக்க பாண்டவர்கள் இந்தக் கோயிலைக் கட்டியதாகவும் புராணங்கள் கூறுகிறது கடலுக்குள் ஐந்து சிவலிங்கங்களை அமைத்து அவற்றைச் சுற்றி கோயில் எழுப்பப்பட்டுள்ளது.
கடல் சீற்றங்கள் மூலம் கோயில் படிப்படியாக சிதிலமடைந்து வருவதாகவும் கொடிமரம் மட்டும் அப்படியே புதிதாக இருப்பதாகவும் கூறுகிறார்கள். கடலுக்குள் 1 கி.மீ தொலைவுக்கு அப்பால் இருக்கும் கோயிலுக்கு செல்வது என்பது சாதாரணமான விசயம் இல்லை என்றாலும் இதை கண்டு மக்கள் பயம் கொள்வதில்லை. இவ்வளவு அபாயம் இருந்தும் இன்றுவரை எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை என்பது மிகவும் ஆச்சரியமான ஒன்றுதான்
இந்த பதிவை இறுதிவரைக்கும் படித்ததற்கு மிக்க நன்றி மேலும் இது போன்ற பல வகையான சுவாரசிய தகவலை தரிந்து கொள்ள நமது பக்கத்தை பின்தொடருங்கள் நன்றி ...
0 Comments